top of page

"காவலன் நானடி கண்ணம்மா 11"


epi 11

............

......ராம்பிரசாத்தின் ஒற்றை சொல்லில் சந்தோசமடைந்த பூவிழி ஓடிச்சென்று காவ்யாவையும் வதனாவையும் கட்டிக்கொண்டு குதித்தாள்.

"ஏய் .....என்னடி ....இந்த குதி குதிக்கிற ...அச்சோ விடுடி விடு ...;;" என கூறியபடி பூவிழியிடமிருந்து ஒருவாறு தன்னை பிரித்து எடுத்தாள் காவ்யா.. மறுபக்கம் வதனாவும் பூவிழியிடம் இருந்து ஒருவாறு தன்னை விடுவித்து கொண்டு அவளை பார்த்து .."என்னடி அதிசயமா கிடக்கு .... இவ்வளவு நேரம் இவள் இருந்து அழுதது என்ன .....இப்ப இந்த குதி குதிக்கிறது என்ன .....என்னடி ஆச்சு இவளுக்கு ஏதும் பேய் ... கீய்... பூந்திட்டோ .. என பூவிழியை ஒரு மார்க்கமாக பார்த்தாள் ..

" பேய்.. கீய் எதுவும் பூரேல .... ராம் தான் பூந்திட்டார் இல்லையா பூவிழி .."என கனவுலகத்தில் சஞ்சரித்து கொண்டிருந்த பூவிழியை உலுக்கி நனவுலகத்திற்கு கொண்டு வந்தாள் காவ்யா .

தோழியர் இருவரையும் பார்த்து வெட்கப் புன்னகை பூத்த பூவிழி காவ்யாவிடம் அவளது செல்போனை கொடுத்தவாறே அவளின் கன்னத்தில் ஒரு முத்தம் வைத்து "..தேங்க்ஸ் காவிக்குட்டி ......" என கூறியபடி தனது அறைக்குள் சென்று புகுந்து கொண்டாள்..

செல்லும் அவளையே பார்த்து கொண்டிருந்த வதனா யாருடி போன்ல கதைச்சது பிரசாத்தா......என கேட்டு வாய் பிளந்தாள். அவளை பார்த்து புன்னகையுடன் தலையசைத்த காவ்யா

" பாவம்டி அவ .....தெரியாத்தனமா அவ கதைச்ச வார்த்தை.... பிரசாத்த இவ்வளவு கோபத்திற்கு ஆளாக்கி வச்சிருக்கு ....அவ என்ன வேணும் எண்டேவா அப்பிடி கதச்சா ......குழந்தடி அவ .....ஆனா பிரசாத் தான் அத தப்பா புரிஞ்சுகிட்டார் .

இன்னைக்கு அவள பார்த்ததோ என்னவோ ... அவருக்கு ஒரு மாதிரியா இருந்திருக்கும் ...அது தான் அவ கூட பேசியிருக்கார்....ஏன் பூவிழி வீட்டில தனியா இருப்பா எண்டு தெரிஞ்சே சுந்தர் மூலமா நம்மள இங்க சீக்கிரம் போக சொன்னது யாரு ... பிரசாத் தானே ....

என்னதான் இருந்தாலும் எங்க எல்லோரையும் விட பூவிழியை பற்றி நல்லா தெரிஞ்சவர் பிரசாத் மட்டும் தான் ... அத அவர் புரிஞ்சுக்கிறதுக்கு கொஞ்ச நாள் ஆகலாம்.... ஆனா கட்டாயம் புரிஞ்சுப்பார்..... என கூறினாள்.

தோழியின் கூற்றை ஏற்றுக்கொண்டது போல் தலையசைத்த வதனா ஒரு பெரு மூச்சோடு தன்னுடைய வேலைகளை பார்க்க போனாள்...

தனது அறைக்குள் வந்து கட்டிலில் விழுந்த பூவிழி பிரசாத்தை நினைத்து கண்ணீர் வடித்தாள்... முன்னை போல் இல்லாது இது ஆனந்த கண்ணீராக இருந்தது தான் அதிசயம்.....

தான் முதன் முதலில் பிரசாத்தை பார்த்தது எப்பொழுது ...எச்சந்தர்ப்பத்தில் என நினைத்து பார்த்தவளுக்கு இப்பொழுது உடம்பெல்லாம் ஓடிய சிலிர்ப்பே அந்நாளின் தாக்கம் எப்படிப்பட்டது என்பதை படம் பிடித்து காட்டியது.... அதையே நினைத்து கொண்டிருந்த பூவிழிக்கு அந்நாளின் நினைவு கண் முன்னே விரிந்தது.....

*******************

பூவிழியின் ராம் என்ற விழிப்பை கேட்டு போனை வைத்த பிரசாத் ஆபிசில் கண்மூடி தன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தான்.. யாரையும் தன்னை ராம் என அழைக்க விடாமல் ,,,தான் மட்டுமே அப்பெயருக்கு சொந்தக்காரி போல் .....ஏன் சுந்தரை கூட யாரும் ராம் என்று அழைக்ககூடாது ....ஏனென்றால் தான் மட்டுமே தன்னவனை அப்பெயர் கொண்டு அழைக்கும் உரிமை கொண்டது போலும் ... அப்பெயர் என்னவோ தன்னுடயவனுக்கே மட்டும் சொந்தம் என்பது போல் அவள் பண்ணிய அழிச்சாட்டியம் நினைவில் வந்து அவனுக்கு மெலிதாக புன்னகையை தந்தது ,,,,

அந்த புன்னகையுடனேயே பூவிழியை தான் சந்தித்த அந்த தருணத்தை நினைத்து பார்த்தவனுக்கு என்ன என்று சொல்லமுடியாத உணர்வு தான் இன்றும் தோன்றியது...

7 வருடங்களுக்கு முன்.....

நேரம் இரவு எட்டு மணி ....சென்னையின் பிரபல எஞ்சினியரிங் கல்லூரியின் ஆண்கள் விடுதியின் ஒரு அறையில் ராம் சுந்தர் , ராம் பிரசாத் இருவரும் அமைதியாக பாடப்புத்தகத்தை எடுத்து ஒருவரை ஒருவர் மிஞ்சும் அளவிற்கு புத்தகத்திற்குள் தலையை நுழைத்து படித்து கொண்டிருந்தார்கள் என்று கூறினால் நம்புவதற்கு நீங்கள் முட்டாள்களா என்ன??......

ஆம் உங்களை முட்டாள் ஆக்காமல் அவர்கள் இருவரும் யாருக்கும் தெரியாமல் தங்களது அறைக்கதவை திறந்து பூனை போல் பதுங்கி பதுங்கி வெளியில் வந்து காஸ்டல் வாச்மேனின் கண்ணுக்கு மண்ணைத்தூவும் வேலையே இல்லாமல் எட்டு மணிக்கே தூங்கும் வாச்மேனை பார்த்தபடியே விடுதி வளாகத்தின் வாசல் கேற்றின் மேல் ஏறி இருவரும் வெளியில் குதித்தனர்...

இருபது வயது நிரம்பிய அந்த இரு வாலிபர்களும் ஒருவரை ஒருவர் பார்த்து " ஸ்ஸ் அப்பாடா...." என பெருமூச்சு விட்டனர்...அவர்கள் இருவரையும் பார்த்து இன்னொரு ஜீவனும் பெரு மூச்சு விட்டது ...அது வேறு யாருமல்ல அந்த வாச்மேனின் செல்ல நாய்...அந்த நாய் வாச் மேனுக்கு விசுவாசமாய் இருப்பதை விட்டு இவர்கள் இருவருக்கும் விசுவாசமாக இருப்பதற்கு ஒரே காரணம் .....பிரியாணி......

தாம் இருவரும் வெளியில் சென்று பிரியாணி சாப்பிடுவது மட்டுமல்லாமல் அந்த நாய்க்கும் பிரியாணி வாங்கி போட்டு ....காஞ்ச ரொட்டி போடும் அதன் முதலாளி மேல் உள்ள விசுவாசத்தை தங்கள் மேல் திருப்பி போட்டனர் அந்த இரட்டை நண்பர்கள்....

என்னடா இது இரட்டை நண்பர்கள் என்று நீங்கள் ஜோசிக்க நேரம் கொடுக்காமல் அவர்கள் இருவரின் பெயரே தான்அதற்கு காரணம்..

இவர்கள் பிரியாணி சாப்பிடப்போகும் இடைவெளியில் இருவரும் எப்படி நண்பர்கள் ஆனார்கள் என்பதை பார்க்கலாம்.....

*********************

மதுரை பக்கம் உள்ள ஒரு ஊரின் பஞ்சாயத்து தலைவரான ராமமூர்த்தி என்பவரின் மூத்த வாரிசே ராம்பிரசாத்.. ராமமூர்த்தி பஞ்சாயத்து தலைவர் மட்டும் அல்லாது ஊரின் பெரிய தனக்காரரும் இவராவார். ஏகப்பட்ட சொத்திற்கு

ஒரே வாரிசான ராம மூர்த்தியின் குல தொழில் விவசாயம் ... தங்களுக்கே சொந்தமான ஊரின் பாதிக்கு மேலான நிலங்களில் ஆட்களை நியமித்து விவசாயம் பார்ப்பதும் பற்பல தோப்புக்களை சிறப்பாக பராமரித்து தனது அப்பா தாத்தா விட்டு சென்ற சொத்தை நேர் வழியில் பல மடங்காக பெருக்கியவர் ராமமூர்த்தி...

மூர்த்தி அய்யா என்று கூறினாலே ஊரில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எழுந்து நின்று மரியாதை தரும் அளவிற்கு தன்னுடைய பணத்தால் அல்லாது குணத்தால் நன் மதிப்பை பெற்றிருந்தார் ராம மூர்த்தி....

அவரின் குலவிளக்காக குடும்பத்திற்கு ஏற்ற சாந்தமான மனைவியாக மூன்று பிள்ளைகளின் தாய் என்று யாரும் கணிக்க முடியாத அழகோடு அந்த பால்நிலவிற்கு ஒப்பாக மிளிர்பவள் வான்மதி... மதிம்மா என கணவராலும் ..... பெரியம்மா என ஊர்க்காரர்களாலும் அழைக்கப்படும் வான்மதி கொடை உள்ளம் கொண்டதில் அந்த கர்ணனையே மிஞ்சுபவளாக திகழ்ந்தாள்..யார் ..எவர் என்று பார்க்காது வீடு தேடி உதவி என்று வருபவர்களை அவர்களின் முகம் பார்த்தே அவர்களிற்கு தேவையானதை அள்ளிக்கொடுப்பதில் அவருக்கு நிகர் அவரே தான்..

அவள் பெற்றெடுத்த முத்துக்கள் மூன்றில் மூத்தவன் ராம்பிரசாத் ..... இளையவன் குருப்பிரசாத்....கடைக்குட்டி வெண்ணிலா...

இம்மூவரும் வயதுக்கே உரிய சேட்டைகளுடனும் குறும்புகளுடனும் துரு துரு என இருந்தாலும் குணத்தில் அப்படியே தாய் தந்தையரையே உரித்து படைத்திருந்தனர்.

ராம்பிரசாத் தங்களது ஊரிலேயே பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரி படிப்பிற்காக சென்னை பிரபல கல்லூரியில் சீட் கிடைத்ததை பெற்றோரிடம் கூறிய போது நிமிடம் தாமதியாது தங்களுடைய ஆசிர்வாதத்தையும் அவன் தங்கி படிப்பதற்கும் அவனுடைய செலவுக்கும் என்று ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கியில் போட்டே விட்டனர்...

இளையவன் குரு என அழைக்கப்படுபவன். தமயனை போலவே நன்றாக படிப்பவன் . தமது ஊரில் உள்ள உயர் நிலைப் பள்ளியிலேயே ப்ளஸ் டூ படித்து கொண்டிருந்தான்..

கடைக்குட்டி வெண்ணிலா ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள் . ரொம்பவே சுட்டிப்பெண்.. அண்ணன்கள் இருவரின் செல்ல தங்கை..

*******************

ராம்பிரசாத் கல்லூரியில் நுழைந்த அன்று சீனியர் மாணவர்கள் ஒரு மாணவனை ராக்கிங் செய்து கொண்டிருப்பதை பார்த்து அவர்கள் அருகே சென்றான்..அங்கு சீனியர் மாணவர்களில் ஒருவன் வாய்க்குள்ளேயே நுழைய முடியாத ஒரு ஆங்கில பாடலை பாடிக்காட்ட அதை அப்பிடியே திருப்பி பாடும் வேலை அங்கு நின்ற மாணவனுக்கு... கொடுக்க பட்டிருந்தது...

அவர்களை நோக்கி சென்ற பிரசாத் தன்னுடைய வகுப்பறைக்கு எப்படி போவது என ஒரு மாணவனை பார்த்து கேட்டான். " யார் டா... இவன் கொஞ்சமும் பயமே இல்லாமல் என்கிட்ட வந்து வழி கேக்கிறான்......" என ஒரு சீனியர் எகிற

மற்றவர்கள் ஒருவாறு அவனை சமாதானப்படுத்தி விட்டு இவர்கள் புறம் திரும்பினால் பிரசாத் அங்கே நின்றால் தானே .... அவன் மட்டும் இல்லாது மற்றவனையும் இழுத்துக்கொண்டு வகுப்பறைக்கு வந்து சேர்ந்தான்...

பிரசாத்தை பார்த்து சிரித்த மற்றவன் அவனுக்கு நன்றி கூறியபடியே " நானும் இதே கிளாஸ் தான் எண்டு எப்பிடி கண்ட பிடிச்ச...?" என கேட்டதுக்கு " அட்மிசன் குடுக்க வந்தபோது கவனிச்சன் ..." என கூறினான்.."

" ஓ.... தேங்க்ஸ் ..... அண்ட் ஐ ஆம் ராம்சுந்தர் என

தன்னை அறிமுகப்படுத்தி கொண்டான் சுந்தர்...

" ஐ ஆம் ராம்பிரசாத்.... என அறிமுகமானான் மற்றவன்..

இருவருக்கும் ஒரே ஆச்சரியம் தங்களது இருவரது பெயரும் ஒரே மாதிரியாக அமைந்தது .... ஒரே நாளில் இருவரும் தங்களை ஒருவரை பற்றி ஒருவர் எல்லாவிடயத்தையும் பகிர்ந்து கொண்டனர்.

சிறு வயதிலேயே இரக்க குணம் கொண்ட பிரசாத் சுந்தருக்கு பெற்றோர் இல்லை என்பதையும் அவன் ஆசிரமத்தில் வளர்ந்தான் என்பதையும் கேட்டவுடன் அவன் மேல் இன்னும் பாசம் கூடியது ..அதனாலேயே அவர்களின் நட்பு மிகவும் ஆழமாக காணப்பட்டது எனலாம். இவர்கள் இருவரும் காஸ்டலிலும் போராடி ஒரே அறையை பெற்றுக்கொண்டனர்... நன்றாக படிக்கும் மாணவர்கள் என்பதால் மேனேஜ்மென்டும் அவர்களுக்கு சலுகை வழங்கியது..

இவ்வாறு இணைந்த இரு நண்பர்களும் அந்த காலேஜையே ஒரு கலக்கு கலக்கினர்... படிப்பிலும் சரி மற்ற விடயங்களிலும் சரி ஒருவரை ஒருவர் மிஞ்சும் அளவிற்கு திகழ்ந்தனர்... இவர்கள் இருவருக்கும் இவர்கள் காலேஜில் ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு என கூறினால் அது மிகையில்லை....

தொடரும்........

bottom of page