top of page

"காவலன் நானடி கண்ணம்மா 4


epi 4

........ வாசல் கதவு திறக்கும் ஓசையைக் கேட்டு நண்பர்கள் இருவரும் அங்கு பார்வையைப் பதித்தனர். கதவைத்திறந்துகொண்டு வந்த காவ்யாவும் வதனாவும் நண்பர்களைப்பார்த்து குட்மோர்னிங் சொன்னார்கள்.. அவர்களுக்கு பதில் வணக்கம் கூறிய சுந்தர் ''அதிகாலையிலேயே ரெண்டு பேரும் எங்கு போனீங்க?'' என வினவினான்..''கோயிலுக்குப் போய்ற்று வந்தோம்'' என காவ்யா பதில் கூறிக்கொண்டு இருக்கும் போதே ''இன்னும் பூவிழி எழும்பவில்லையா? இன்று அவளுக்கு எக்ஸாம் வேறு இருக்கிறது இன்னுமா தூங்குகிறாள்''.. எனக்கூறிக்கொண்டு அவளை எழுப்புவதற்காக அவளின் அறைக்கு

சென்ற வதனாவைப்பார்த்தபடி நின்ற காவ்யா சுந்தரைப்பார்த்து ''நீயாவது அவளை எழுப்பி இருக்கலாம் இல்லையா?'' எனக்கேட்டாள்.

அவளின் கேள்விக்கு பதில் சொல்லாது கதிரை முறைத்தான் சுந்தர்.. அவன் முறைப்பது தெரிந்தும் தனக்கும் இதற்கும் சம்மந்தமில்லாதது போல் கையில் உள்ள அருகம்புல் ஜூஸை ஒரே வாயில் குடித்து முடித்துவிட்டு ''எனக்கு ஹாஸ்பிட்டல் போக நேரம் ஆச்சு.. நான் போய் ரெடியாகிரன்'' எனக்கூறி இடத்தைக்காலி செய்தான் கதிர்... போகும் நண்பனைப்பார்த்தவாறு "நானும் இன்று ஆபீஸ் சீக்கிரம் போகவேண்டும் .. சீக்கிரம் போய் வேலைகளை கவனி" எனக்காவ்யாவிடம் கூறிய படியே எழுந்து தன் அறையை நோக்கிச் சென்றான் சுந்தர்... செல்லும் அவனையே இமைக்காது பார்த்த காவ்யா பின் ஒரு பெரு மூச்சுடன் தன் வேலைகளை கவனிக்கசென்றாள்.

வதனா பூவிழியை எழுப்பும் இடைவெளியில் காவ்யாவையும் வதனாவையும் பற்றிய சிறு அறிமுகம்.......

***************************

காவ்யாவும் வதனாவும் ஒரே ஊரைச்சேர்ந்தவர்கள். சிறு வயதில் இருந்தே ஒரே பள்ளியில் படித்து ஒன்றாகவே வளர்ந்தவர்கள்.. காவ்யாவுடைய பெற்றோரும் வதனாவுடைய பெற்றோரும் தூரத்து உறவினர்கள்.. ஆனால் அவர்களின் உறவைத்தாண்டி இரு குடும்பங்களுக்கிடையே ஒரு விதமான நட்பு உருவாகியிருந்தது..

காவ்யா வீட்டிற்கு ஒரே பெண்..தந்தை விஸ்வநாதன் அவர்கள் ஊரில் உள்ளஉயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பணிபுரிகின்றார்...தாய் தெய்வானை..கணவரும் மகளும் மட்டுமே தன்னுடைய உலகம் என வாழ்பவர். காவ்யா தைரியமானவள்,எதையும் நேருக்கு நேர் எதிர்கொள்ளும் திறமை கொண்டவள். ஆனால் வதனா அவளிற்கு நேர்மறையானவள், மிகவும் பயந்த சுபாவம் கொண்டவள்...

வதனாவின் தந்தை அவள் பத்தாவது படிக்கும் போதே ஒரு விபத்தில் காலமாகினார். அதன் பின் அவளையும் அவளது தம்பி கண்ணனையும் தன் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக்கொண்டார் தாய்

வளர்மதி. தந்தை இல்லாத குறை தன் பிள்ளைகளுக்கு தெரியாதபடி வளர்த்தார். அவர்களிற்கு என்று இருக்கும் தென்னந்தோப்பில் இருந்து வரும் வருமானத்தை சிக்கனமாக சேமித்து பிள்ளைகளை படிக்க வைக்கின்றார்.

காவ்யாவிற்கு தான் பெரிய வக்கீல் ஆக வேண்டும் என்பதே ஒரே கனவு.. அவளது கனவு ஈடேற அவள் சென்னையில் உள்ள கல்லூரியில் இணைவதற்காக முடிவெடுத்த நேரம் சிறு வயதில் இருந்தே காவ்யாவுடனேயே சுற்றி திரிந்த வதனாவும் அவளுடன் நானும் வக்கீல் படிப்புதான் படிப்பேன் என முடிவெடுத்து காவ்யாவுடன் சென்னைக்கு புறப்பட்டாள்.. பெற்றோரின் ஆசீர்வாதத்துடன் தோழிகள் இருவரும் சென்னையில் உள்ள கல்லூரியில் B.A.B.L பட்டப்படிப்பு முடித்து இப்பொழுது சென்னையின் பிரபல வழக்கறிஞர் ஒருவரிடம் பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர்..

ராம்சுந்தர்,பூவிழி, கதிரவன், காவ்யா, வதனா இவர்கள் ஐவரும் எவ்வாறு ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்கின்றனர் என்பதை கதையின் போக்கில் அறிந்து கொள்வோம்........

தொடரும்.........

bottom of page