top of page

"காவலன் நானடி கண்ணம்மா 10"


epi 10.

****************

வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை

தாண்டி வருவாயா .............

....எனும் பாடல் டிவியில் ஒலித்து கொண்டிருந்தது..ஹாலில் போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்திருந்த பூவிழி தொலைக்காட்சியை பார்க்காது எங்கோ வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தாள் .

"கதவை திறந்து போட்டபடி அப்படி என்னடி செய்து கொண்டிருக்கிறாய்? "என கேட்டபடி உள்ளே வந்த வதனா பூவிழி அமர்ந்திருந்த நிலையை பார்த்ததும் அவள் பின்னே வந்த காவ்யாவிடம் கண் ஜாடை காட்டினாள் .

அவளின் கண்ஜாடையை புரிந்து கொண்ட காவ்யா பூவிழியின் அருகில் வந்து அவளின் தோள் தொட்டு உலுப்பினாள் . அவளின் உலுப்பலில் திடுக்கிட்டு சுற்றும் முற்றும் பார்த்த பூவிழி 'தான் எவ்வளவு நேரம் அப்பிடியே இருந்திருக்கிறேன் என தன்னை தானே நொந்தபடி தன் முன்னே நின்றவர்களை பார்த்து சிரிக்க முயன்றாள்.

அவளை புரிந்து கொண்டது போல் மற்ற இருவரும் அவள் அருகில் வந்தமர்ந்தனர். " ஏன் பூவிழி இன்று இவ்வளவு சீக்கிரம் காலேஜில் இருந்து வந்திட்ட.... " என கேட்ட காவ்யாவிடம் " தலைவலி " என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னாள் பூவிழி .

"ஆமா யார் உன்னை வீட்டில் ட்ராப் பண்ணினது..."என கேட்ட வதனாவை நிமிர்ந்து பார்த்தாள் பூவிழி.பின் தலையை குனிந்தபடி " ராம் ..." என்று மீண்டும் ஒற்றை வார்த்தையில் பதில் கூறியபடியே அவளின் தோள் சாய்ந்தாள் பூவிழி.

பூவிழியின் தலையை பாசத்துடன் தடவிய காவ்யா "நீ ஆபீஸ் போயிருந்தியா...." என கேட்டாள் ." ம்ம்" என தலையாட்டிய பூவிழியிடம் " சுந்தர் தான் கால் செய்து எங்க ரெண்டு பேரையும் வீட்டுக்கு போக சொன்னார்...." என கூறினாள்..

சுந்தருக்கு யார் சொல்லியிருப்பார்கள் என்ற எண்ணத்தில் அமைதி காத்தாள் பூவிழி . அவளையே பார்த்துக்கொண்டிருந்த தோழிகள் இருவரும் பின் தாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

" டூ மச்சா திங் பண்ணாதடி எல்லாம் சரியா போயிடும் " என பூவிழியிடம் கூறினாள் காவ்யா .அவள் கூறியதை கேட்டு சிரிக்க முயன்ற பூவிழிக்கு ஏனோ சிரிப்பு வரவில்லை. பதிலுக்கு அழுகை தான் வந்தது . காவ்யாவின் மடியில் படுத்து தேம்பி அழுதாள் பூவிழி . எவ்வளவோ சமாதானம் கூறியும் அழுகையை நிறுத்த முடியாதபடியால் சுந்தருக்கு கால் செய்தாள் காவ்யா.

மறு முனை எடுக்கப்பட்டதும் " ஹலோ சுந்தர் இங்கு பூவிழி அழுதுகிட்டே இருக்கா எங்களுக்கு என்ன பண்றது எண்டே தெரியல " என கூறினாள் . மறுமுனையில் நிலவிய நிசப்தத்தில் புரியாமல் போனை பார்த்த காவ்யா மீண்டும் " ஹலோ சுந்தர்" என அழைத்தாள்.

" நான் பிரசாத்" என்ற குரலை கேட்டதும் ' அய்யயோ' என மனதுக்குள் நினைத்தபடி என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதி காத்தாள்.

பூவிழி அழும் சத்தத்தை போனின் மூலம் கேட்ட பிரசாத் போனை பூவிழியிடம் கொடுக்குமாறு கூறினான் . அவன் கூறிய அடுத்த நொடி பூவிழியிடம் போனை நீடிய காவ்யா வதனாவை பார்த்து கண் ஜாடை காட்டியபடி எழுந்தாள் . அவளின் கண்ணசைவில் எதுவும் புரியாவிட்டாலும் அவளுடன் சேர்ந்து கிச்சினுக்குள் சென்றாள் வதனா.

" என்ன ஏண்டி வரசொன்னாய் அவளே பாவம் அழுதுகிட்டு இருக்கா அவள் சமாதனம் செய்யாம இங்க ஏண்டி வந்து நிக்கிறாய்..." என கேட்ட வதனாவிடம் " இப்ப ரெண்டு நிசத்தில அவ நார்மல் ஆகிடுவா ஸோ யூ டோன்ட் வொர்ரி....." என கூறிய காவ்யாவை விசித்திரமாக பார்த்தாள் வதனா.

காவ்யா நீட்டிய போனை வாங்கி " ஹலோ சந்து " என பேசமுனைந்த பூவிழியிடம் "...கண்ணம்மா ......" என ஒரே ஒரு வார்த்தையை மட்டும் கூறினான் ராம்பிரசாத்... அந்த ஒரு அழைப்பில் முகம் எல்லாம் பூவாக மலர அழுத கண்களை துடைத்தபடியே "..ராம்.." என பூவிழி அழைத்தவுடனேயே மறுமுனை துண்டிக்கப்பட்டது .

மறுமுனையில் போன் வைக்கப்பட்டதும் அதில் பாதிக்கப்படாதவளாக அவனின் ஒற்றை அழைப்பிலேயே சமாதானம் அடைந்தாள் பூவிழி . நீண்ட காலமாக அவன் தன்னை அழைக்கும் அச்சொல்லை இப்பழுது சிலகாலமாக அவன் அழைக்காமல் இருந்ததும் இப்பொழுது அவன் எப்பிடி அழைத்தால் அவளுக்கு பிடிக்குமோ அப்படி அவன் அழைத்ததில் சிறகே இல்லாமல் வானத்தில் பறந்தாள் பூவிழி...

தொடரும்....

bottom of page