top of page

"காவலன் நானடி கண்ணம்மா 9

ஹாய் ... "காவலன் நானடி கண்ணம்மா" epi 09

epi 09

பிரசாத்தின் ஆபிசை விட்டு வெளியில் வந்த பூவிழியின் மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்து கொண்டிருந்தது.அவளையே பார்த்துக்கொண்டிருந்த ஆனந்தி....

" என்னாச்சுடி ஏன் ஒரு மாதிரி இருக்க....." என

கேட்டாள் . " ..ஒண்ணுமில்லை லேசா தலைவலிக்கிற மாதிரி இருக்கு நான் இப்பவே ஒரு ஆட்டோ பிடிச்சு வீட்டுக்கு போறன் ....நீ காலேஜில் சொல்லிரு.."என கூறினாள்.

"ஆட்டோ எல்லாம் வேணாம் நான் என் வண்டியிலேயே உன்னை டிராப் பண்ணிறேன் .." என ஆனந்தி சொல்லிக்கொண்டிருக்கும் போதே

"தேவையில்லை..." எனும் குரல் கேக்க தோழிகள் இருவரும் திரும்பி பார்த்தனர்.. அங்கு வந்துகொண்டிருந்த பிரசாத் பூவிழியின் அருகில் வந்து அவளையே உற்று பார்த்தான் . பின் "..என் கூட காரில் ஏறுங்க நான் உங்களை டிராப் பண்ணுறேன்..." என கூறி கார்ப்பாக்கை நோக்கி நடந்தான்.

".. பரவாயில்லை சார் உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம் ..." என கூறிக்கொண்டே பூவிழியை பார்த்த ஆனந்தி "..ஆங்..." என வாயை பிளந்தாள். ஏனெனில் பிரசாத்தின் பின்னால் அவனின் காரை நோக்கி நடந்து கொண்டிருந்தாள் பூவிழி...

'என்னதான் நடக்குது இங்க.... ' என மனதுக்குள் ஆச்சரியப்பட்ட ஆனந்தி மற்ற தோழிகளுடன் இணைந்து கல்லூரி நோக்கி தனது வண்டியை செலுத்தினாள்.

பூவிழிக்காக முன் பக்க கார் கதவை திறந்து விட்ட பிரசாத் அவள் காரில் ஏறியவுடன் தானும் அமர்ந்து காரை ஓட்டினான். சாலையில் நுழைந்து அதற்கு ஏற்றால் போல் சென்று கொண்டிருந்த காரில் மௌனம் மட்டுமே ஆட்சி செய்து கொண்டிருந்தது.

அம் மௌனத்தை கலைக்கும் வண்ணம் காரில் உள்ள ரேடியோவை ஆன் பண்ணினான் பிரசாத்....

சுகம் என்பது தொலைவானது உனை

கண்ட பின்னே எனை சேர்ந்த்தது..

வாழ்வெனக்கு வசப்பட்டது வசந்தம்

என் கண்ணில் தென்பட்டது..

அலைபாய்ந்த நெஞ்சுக்குள் அமைதியை ..

.. தந்தாயே... நான் தேடிக்கண்ட திரவியமே

எனை உனக்காய் வார்த்தேனே.........

என் ஜீவன் முழுதும் வாரித்தந்து உனை,,

என்றும் காப்பேனே... கண்ணுக்குள்ளே

உன்னை வைத்தேன் கண்ணம்மா.....

..பாடலின் வரிகளை கேட்டபடியே பூவிழியை திரும்பி பார்த்தான் பிரசாத்..அவனின் பார்வையில் இருந்த உணர்வை கண்டு கொண்ட பூவிழி தலையை குனிந்து தன்னை நிலை படுத்திக்கொண்டாள்.

அவளின் நிலையை புரிந்ததன் அடையாளமாக ஒரு சின்ன சிரிப்புடன் சாலையில் கவனம் செலுத்தினான் பிரசாத். அவனின் சிரிப்பில் பூவிழியின் முகம் செம்மையை பூசிக்கொண்டது...

பூவிழியின் வீடு உள்ள அப்பாற்மண்டின் வாசலில் காரை நிறுத்திய பிரசாத் மென்மையான புன்னகையுடன் அவளின் தலையை தடவினான்.

அவ்வளவு நேரமும் தன்னை ஓரளவு நிலைப்படுத்தி கொண்டிருந்த பூவிழி அவனது அந்த தொடுகையில் கண்ணில் கண்ணீர் வரப்பெற்று அவன் தோள் சாய்ந்தாள்..

தன் தோள் சாய்ந்தவளை ஆதரவாக அணைத்த பிரசாத் அவளின் நெற்றியில் இதழ் பதித்தான்.. எவ்வளவு நேரம் இருவரும் ஒருவரை ஒருவர் மறந்து அப்படியே இருந்தனரோ...வழியில் சென்ற காரின் ஹார்ன் சத்தத்தில் முதலில் தன் நிலைக்கு திரும்பிய பிரசாத் பூவிழியை அணைத்திருந்த கையை விலக்கினான்..

அவனின் விலைகளை கண்டு கொண்ட பூவிழி கேள்வியாக அவன் முகம் பார்த்தாள்.. பார்த்தவள் அதிர்ந்தாள்.. ஏனென்றால் சற்றுமுன் அவளை பார்த்து மென்மையாக சிரித்து தலை கோதியவனா இவன் என்று எண்ணுமளவிற்கு அவனுடைய முகம் இறுகி கடினத்தன்மையுடன் காணப்பட்டது..

காரை விட்டு இறங்கிய பிரசாத் அவள் அமர்ந்திருந்த கார் கதவை திறந்து விட்டான் .

அவனை பார்த்தபடியே காரை விட்டு இறங்கிய பூவிழி அவனிடம் எதோ கூற வாயெடுத்தாள்.

அவள் கூற வந்ததை கணக்கெடுக்காமல் ஏன் அவள் ஒருத்தி அங்கு நிற்பதையே கண்டு கொள்ளாமல் எதுவும் சொல்லாது இறுகிய முகத்துடன் காரிட்குள் சென்றமர்ந்து காரை மிக வேகமாக செலுத்தினான் நம் கதையின் நாயகன்

ராம்பிரசாத்.......

தொடரும்......

bottom of page