top of page

"காவலன் நானடி கண்ணம்மா 5

  • EPISODE 5
  • Jul 18, 2017
  • 1 min read

epi 5

**************

....." பூவிழி,பூவிழி எழுந்திரு ..பார் மணி எட்டாகப்போகிறது நீ இன்னுமா தூங்கிக்கொண்டு இருக்கிறாய்.. காலேஜுக்கு போக உனக்கு நேரம் போகவில்லை?? எழும்புடி சீக்கிரம்...."

என தலைமுதல் கால்வரை போர்வையை போர்த்திருந்த பூவிழியின் போர்வையை இழுத்தபடி அவளை எழுப்பினாள் வதனா..

"ப்ச்சு ... ப்ளீஸ்... கொஞ்ச நேரம் என்னைத்தூங்கவிடு எனக்கு தூக்கம் தூக்கமா வருது ப்ளீஸ்..... ப்ளீஸ்..."

என ஒன்றுக்கு நான்கு முறை ப்ளீஸ் பண்ணி போர்வையை மீண்டும் இழுத்திப்போர்த்துக்கொண்டு தூங்க ஆரம்பித்தாள் நம் கதையின் நாயகி.....

'சரியான கும்பகர்ணி .... உன்னை இப்படி எழுப்பினால் சரிவராது'

என நினைத்தபடி அறைவாசலில் போய் நின்று ..சுந்தர் இவள் இப்போதைக்கு எழும்புவதாக இல்லை.. அவள் இனி எழும்பி காலேஜுக்கு ரெடியாகிப்போக நேரதாமதமாகும் .....அதனால் நீ அவளை விட்டு விட்டு இன்று ஒருநாளாவது ஆபீசுக்கு நேரத்திற்குப் போய் உன் முதலாளி நண்பனிடம் இருந்து பேச்சு வாங்காமல் தப்பித்துக்கொள் எனபூவிழியைப் பார்த்தவாறே கூறினாள் வதனா....

வதனா கூறிய அடுத்தநொடி போர்வையை விலத்தி விலுக்கென்று எழுந்தமர்ந்தாள் பூவிழி...

பூவிழியைப் பார்த்த வதனா பக்கென்று சிரித்துவிட்டாள்.. அவளின் சிரிப்பு சத்தம் கேட்டு உள்ளே வந்த காவ்யாவும் பூவிழியைப் பார்த்து சிரித்தாள்.....

தோழிகள் இருவரும் சிரிப்பதை பார்த்த பூவிழி "ஏன் வதனாக்கா சுந்தரின் M.D தானே வெளியூர் சென்றிருக்கிறார்.. எப்பொழுது திரும்பி வந்தார்? இதை ஏன் நீங்க என்னிடம் முதலிலேயே சொல்லவில்லை சொல்லியிருந்தால் நேரத்திற்கு எழும்பியிருப்பேனே... பாருங்க இப்பொழுது உங்களால் சுந்தருக்கு தான் கஷ்டம்"

என முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு கூறினாள்.....

பூவிழி கூறியதைக் கேட்ட தோழிகள் இருவரும் அவளைப்பார்த்து பல்லைக்கடித்தனர்..

" .. யாரு நீ... நேரத்திற்கு எழும்பிட்டாலும்..

ஒவ்வொரு நாளும் உன்னை எழுப்பி காலேஜுக்கு அனுப்புறதிலையே என் தொண்டைத்தண்ணி வத்திப்போகுது.. நீ லேட்டாய்ப் போய் திட்டு வாங்குவது மட்டுமல்லாது சுந்தரையும் சேர்த்து திட்டு வாங்க வைக்கிறாய்" எனக்கூறிய வதனாவைப்பார்த்து அசட்டுச்சிரிப்பு சிரித்தாள் பூவிழி,,,

பூவிழியைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்ட காவ்யா" வர வர உன் லூட்டிக்கு அளவில்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது பார்த்து நடந்துகொள்" என ' ப்ரீ அட்வைஸ்' செய்துவிட்டு கிச்சினுக்குள் நுழைந்து கொண்டாள்...

கவ்யாவை தொடர்ந்து வதனாவும் "எவ்வளவு நேரம் இப்பிடியே இருப்பதாக உத்தேசம்.. ம்ம்?? செல் சென்று சீக்கிரம் ரெடியாகு" எனக்கூறி கட்டிலில் கலைந்து கிடந்த போர்வையை எடுத்து சரிசெய்தாள்.. வதனாவையும், காவ்யா சென்ற திசையையும் பார்த்து பழிப்புக்

காட்டியபடியே குளியலறைக்குள் புகுந்து கொண்டாள் பூவிழி ..

தொடரும்........

 
 
 

Comments


bottom of page