top of page

"காவலன் நானடி கண்ணம்மா 6

ஹாய்...

"காவலன் நானடி கண்ணம்மா" அத்தியாயம் 6

epi 06

.... பூவிழி பொறியியல் கல்லூரி மாணவி, மிகவும் அழகானவள், முழுநிலவு போல் பரிசுத்தமாக காணப்படும் அவளது முகத்தில் எப்பொழுதும் சிரிப்பின் சாயல் குடி கொண்டிருக்கும். குறும்புத்தனம் உடைய குழந்தை மனது கொண்டவள்.எந்தவொரு விடயத்தையும் சுலபமாக எடுக்கும் பழக்கம் கொண்டவள், எந்நேரமும் யாருடனேயும் வம்பு செய்து கொண்டு இருப்பாள்.

அவள் கல்லூரியில் வகுப்பறையில் இருப்பதை விட தோழிகளுடன் கல்லூரி வளாகம் பூராவும் சுற்றி திரிவதையே வழக்கமாக கொண்டவள்.

அவளுடைய கல்லூரியிலேயே பூவிழியை தெரியாதவர்களே கிடையாது. யூனியர், சீனியர் என எல்லோருடனும் நட்பாக பழகுவாள். அதேநேரம் அவளுடன் யாரும் சண்டைக்கு நின்றால் தைரியமாக எதிர் கொள்ளும் துணிச்சல்க்காரி.

**************

காலைபொழுதிற்கு ஏற்றதுபோல் சென்னை மாநகரம் என்று போல் இன்றும் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்தது. மக்கள் அனைவரும் இயந்திர கதியில் செயல்ப்பட்டுக்கொண்டிருந்த நேரம் P.R GROUPS OF COMPANY என பெயர் பொறித்த

ஆறு மாடிக்கட்டத்தின் நுழைவாயிலுக்குள் நுழைந்த காரில் இருந்து இறங்கினான் பிரசாத்.

பிரசாத் ஆறு அடி உயரம் ,மாநிறம் ,அவனை கடந்து செல்லும் பெண்களை மட்டுமல்லாது ஆண்களையும் சற்று நின்று திரும்பி பார்க்க வைக்கும் அசாத்திய அழகு கொண்டவன். அவனது அழகில் கவரப்படுபவர்கள் அவனுடைய முகத்தில் தெரியும் கடினத்தில் எப்பொழுதும் சற்று விலகியே நிற்பார்கள்.

..டக்...டக்..டக்...எனும் ஷூ சத்தம் கேட்டதுமே ஒருவருக்கொருவர் கதைத்தபடியும் சிரித்தபடியும் இருந்த அந்த அலுவலகம் குண்டூசி விழுந்தாலும் சத்தம் கேட்கும் அளவிற்கு அமைதியானது,

"குட்மோர்னிங் சார், குட்மோர்னிங் சார்" என்ற பலவிதமான குரல்களுக்கு தன்னுடைய ஒரு சிறு தலயசைவையே பதிலாக கொடுத்தபடி 'மனேஜிங் டிரக்டர்' என்று ஆங்கிலத்தில் பெயர் பொறிக்கப்பட்ட அறைக்குள் நுழைந்தான்.

தன்னுடைய மேசையின் பின் போடப்பட்டிருந்த சுழல் நாற்காலியில் அமர்ந்தபடி தொலைபேசியை எடுத்து தனது செக்கரட்டியை அழைத்தான்...

அவனது அழைப்பை ஏற்று உள்ளே வந்த செக்கரட்டியிடம் கையில் உள்ள பைலை பார்த்தபடியே "மிஸ்டர் ரவி GM சார என்னுடைய கேபினுக்கு வரசொல்லுங்க" என கூறினான்.

அவன் கூறியும் பதில் சொல்லாது நின்ற ரவியை நிமிர்ந்து பார்த்த பிரசாத் கேள்வியாக புருவத்தை உயர்த,

அவன் பார்வையை உணர்ந்த ரவி

" சார் ..... அது வந்து..... வந்து...," என வார்த்தை வரமால் தந்தியடிக்க......

" வந்து... ம்ம் ..என்ன வந்து?" என கேட்ட பிரசாத்திடம் " அதில்லை சார்..... GM சார் இன்னும் ஆபீஸ் வரவில்லை .." என மென்று விழுங்கினான்.

"வாட்..?" எனும் ஒற்றை சொல்லோடு அவனை வெளியே போகச்சொல்லிய பிரசாத் தனது கைகடிகாரத்தில் நேரத்தை பார்த்துக்கொண்டான்...

*******************

சென்னை டிராபிக்கில் எறும்புகள் ஊர்வது போல் ஊர்ந்து செல்லும் வாகனங்களிற்கு நடுவில்''''உர் என்ற முகத்துடன் காரை ஓட்டிக்கொண்டிருந்தான் ராம்சுந்தர்.

அருகில் அமர்ந்திருந்த பூவிழி நொடிக்கொருதரம் அவனை திரும்பி திரும்பி பார்ப்பது

தெரிந்தும் சாலையிலேயே கண்ணைப்பதித்தபடி வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தான் சுந்தர்.

அவனுடைய அமைதி அவளை என்னவோ செய்ய " ம்க்கும்.... ம்க்கும்.." என தொண்டையை செருமினாள். அதற்கும் பதில் இல்லாது போக

" சாரி இனிமேல் கரக்ட் டைமுக்கு எழும்பி, கரக்ட் டைமுக்கு ரெடியாகி, கரக்ட் டைம் காலேஜுக்கு போறன்... " என நான்கு வயது சிறுமி போல் தலையை ஆட்டி ஆட்டி மழலை மொழியில் கூறினாள்.

அவள் கூறியதை கேட்ட சுந்தர் சிரித்தபடியே அவளுடைய தலையில் வலிக்காமல் கொட்டு வைத்து,

"சரியான வாலு, உனக்கு செல்லம் குடுத்து எல்லாரும் கெடுத்து வச்சிருக்காங்க. வர வர உன் வாலுத்தனத்துக்கு அளவில்லாமல போய்க்கொண்டிருக்கிறது . அது நல்லதுக்கில்ல பார்த்க்கோ... அவ்வளவு தான் நான்

சொல்லுவேன்.." என கூறினான்..

"அப்பாடா ஒருவழியா பேசிட்டியா .... அது என்னவோ தெரியல சந்து நீ என்னோட பேசாம இருந்தா எனக்கு என்னமோ மாதிரி இருக்கு"

என கூறியவளை பார்த்து மென்மையாக புன்னகைத்து,

"குட்டிம்மா உங்கூட பேசாம எனக்கும் தான் ஒரு மாதிரி இருக்கு... அதுக்காக நீ பண்ற அழிச்சாட்டியத்துக்கு எல்லாம் என்னால துணை வர முடியாது.... பாரு இவளோ லேட்டா யாரும் காலேஜ் போவார்களா? முதல் பீரியட் இந்நேரம் முடிஞ்சிருக்கும்.. எனக்கும் ஆபீஸ்க்கு வேற லேட்டாயிற்று..பிரசாத் வேற ஆபீஸ் வந்திட்டானம் இப்பதான் ரவி கால் பண்ணினான்.." என கூறினான்.

அவன் கூறியதை கேட்ட பூவிழி சிரித்தபடியே

" ஏன் சந்து இப்பிடி பயந்து சாகிற வர்ற வழில டிராபிக்கில மாட்டிற்றன் என்று உன் MD கிட்ட சொல்லு. தட்ஸ் இட்.... ப்ரோப்ளம் சொல்வெட்.." என

இலகுவாக வழி கூறினாள்..

" நீ ஏன் சொல்லமாட்ட ... எப்பயாவது ஒருநாள் நான் லேட்டா போனா பரவாயில்ல.... நான் எப்பவுமே லேட்டாதானே போறன்... எல்லாம் உன்னால வந்தது.." என கூறியவனை பார்த்து,

" சரி .. சரி.. பழையபடி முகத்த உம் என்று வச்சிருக்காத பாக்கவே சகிக்கல,, இனி நான் நேரத்துக்கு எழும்ப ட்ரை பண்றன்..." என கூரினாள். அதைக் கேட்டு சிரித்தபடியே கல்லூரி வாசலில் காரை நிறுத்தினான் சுந்தர்.

காரை விட்டு இறங்கிய பூவிழி " இப்பிடியே சிரித்துக்கொண்டே இரு சந்து அது தான் உனக்கு அழகு என கூறியபடி கல்லூரி வளாகத்தினுள் சிட்டாக பறந்தாள்.

முகத்தில் கனிவுடன் செல்லும் அவளையே பார்த்து கொண்டிருந்த ராம்சுந்தர் பின் தன்னுடைய ஆபீசை நோக்கி காரை செலுத்தினான்..

**********************

அவசரமாக காரை பார்க் செய்துவிட்டு கிட்டத்தட்ட ஓட்டமும் நடையுமாக லிப்ட்டுக்குள் புகுந்து , நான்காம் தளத்தில் நின்ற லிப்ட்டுக்குள் இருந்து வெளிவந்து ஆபீசிற்குள் நுழைந்தான்..

அவன் நுழைந்த அடுத்த நொடி "குட்மோர்னிங் சார், குட்மோர்னிங் சார்

.."என கேட்ட பல குரல்களுக்கு பதில் வணக்கம் கூறியபடி Md இன் அறைக்கதவை ஒற்றை விரலால் தட்டினான்.

" யெஸ் கமின்" எனும் குரலை கேட்டு கதவை தள்ளியபடி உள்ளே வந்து " குட்மோர்னிங் பிரசாத்"

எனக்கூறியவனை...

எதோ ஒரு பைலில் பார்வையை பதித்தபடி இருந்த பிரசாத் அவனின் குரலை கேட்டு அவனை நிமிர்ந்து பார்த்து கை கடிகாரத்தையும் சேர்த்து பார்த்துக்கொண்டான்.

அவனுடைய பார்வையை உணர்ந்த சுந்தர்

' .. அச்சோ இண்டைக்கு உனக்கு நல்ல மண்டகப்படி தான் நடக்க போகுது..' என தனக்குதானே மனதுக்குள் சொல்லிக்கொண்டான்.

" உட்காருங்க GM சார்... ஏன் நிக்கிறீங்க? களைச்சு விழுந்து வந்திருக்கீங்க போல் இருக்கு .. முதல்ல இந்த தண்ணிய குடிங்க.." என வெகு அக்கறையாக கூறி தன் மேசையின் மீது உள்ள தண்ணீர் போத்தலை அவன் புறம் நகர்த்தி வைத்தான்.

அவனுடைய நக்கலை புரிந்து கொண்டாலும் அந்நேரம் அந்த தண்ணீர் தேவைப்பட்டதால் தண்ணீரை குடித்தபடி பிரசாத்திற்கு எதிர்ப்புறமாக

மேசையின் முன்பக்கத்தில் போடப்பட்டிருந்த கதிரையில் அமர்ந்தான்.

" ஸோ..... இது தான் நீங்க ஆபீஸ் வார நேரம்.....

இப்ப என்ன ரீசன் சொல்ல போறீங்க? ஏற்கனவே ஆயத்தமா தான் வந்திருப்பிங்க... எதுக்கும் சொல்லுங்க ... ஏன் ஆபீஸ் வர இவளோ லேட்?" என கேட்ட பிரசாத்தை பார்த்து

" அதுவா நான் வர்ர வழில ஒரு சின்ன ஆக்ஸிடன்ட்.. அதனால டிராபிக் ஜாம் ஆயிட்டு ... அது தான் வர லேட்டாயிட்டு என எப்பொழுதும் கூறும் பொய்யை இன்று சிறு மாற்றத்துடன் கூறினான் சுந்தர்...

அவனை முறைத்து பார்த்த பிரசாத்

" நீ இப்ப வர வர நன்றாக பொய் பேச பழகிட்டாய்,,,

யாரு ... உன் குட்டிம்மா இந்த மாதிரி போய் சொல்லு என உன்கிட்ட சொல்லி அனுப்பினாங்களா?.." என கோவமாக வினவினான்.

அவனின் கேள்வியை கேட்ட சுந்தர்

' ஆஹா...கண்டு பிடிச்சிட்டானே....எப்படித்தான் இவனால மட்டும் முடியுதோ...' என மனதுக்குள் நினைத்தான்.

மனசுக்குள் நினைத்தது முகத்தில் தெரிந்ததோ என்னவோ அவனுடைய முகத்தையே பார்த்துகொண்டிருந்த பிரசாத் மென்மையாக சிரித்தான்..

" அப்படா சிரிச்சிற்றியா... ஏன்டா இப்பிடி எல்லாம் கேள்வி கேட்டு மனுசன கொல்லுறாய்?.. அது சரி நீ போன காரியம் என்னாச்சு எல்லாம் நல்ல படியா முடிந்தது தானே? என கேட்டான்...

ஜேர்மனில் உள்ள கம்பனி ஒன்றிற்கும் அவனது கம்பனிக்கும் இடையலான ஒப்பந்தம் ஒன்றை பேசி முடிப்பதற்காக கடந்த நான்கு நாட்களுக்கு முதல் டெல்லி சென்றிருந்தான் பிரசாத்.

நண்பனின் கேள்விக்கு சம்மதமாய் தலையசைத்த பிரசாத்.." என்னால் உனக்கு தான் வேலை அதிகமாகி கொண்டே போகிறது, நான் ஊரில் இல்லாத நேரம் நீ தான்

கம்பனிய பாத்துக்கிற... அதோட இங்குள்ள ப்ராஜெக்ட் வர்க் எல்லாத்தையும் செய்து முடிக்கிற,.. அதோட...." என மேலே கூற முடியாமல் நிறுத்தினான்.

அவன் கூற வந்ததன் பொருள் உணர்ந்தவனாய் நண்பனின் கையை தட்டிக்கொடுத்தான் சுந்தர்.

சுந்தரை பார்த்து மென்மையாய் சிரித்த பிரசாத் பின் ஒரு தலையசைவுடன் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு கதிரையில் சாய்ந்து கொண்டான்.

சிறிது நேரம் அவனையே பார்த்துகொண்டிருந்த சுந்தர் பின் ஒரு பெருமூச்சுடன் அறையை விட்டு வெளியேறி தன்னுடைய கேபினுக்குள் நுழைந்து கொண்டான்........

தொடரும்.......

தொடரும்.......

bottom of page