top of page

"காவலன் நானடி கண்ணம்மா 7

ஹாய் தோழமைகளே..

"காவலன் நானடி கண்ணம்மா" epi 07

epi7.....

********************

கல்லூரி வளாகத்தினுள் நுழைந்த பூவிழி தன் வகுப்பறைக்கு சென்றபோது முதலாவது பீரியட் முடிந்து புரபொசர் வெளியில் வருவதை பார்த்தவள் சட்டென அருகில் உள்ள தூணின் பின் மறைந்துகொண்டாள்.

அவர் சென்ற பின் வகுப்பறைக்குள் நுழைந்த பூவிழியை பார்த்த அவளது தோழிகள் "ஹே....." என்ற கூச்சலுடன் அவளை வரவேற்றனர். அவர்களை பார்த்து சிரித்தபடியே ஓடிவந்து அவர்களின் அருகில் அமர்ந்து கொண்டாள் பூவிழி.

" ஏய் என்னடி அதிசயமா இருக்கு இன்று பூவிழி இவ்வளோ சீக்கிரமா காலேஜுக்கு வந்திருக்கா? " என கூறியபடி வெளியே எட்டிப்பார்த்தாள் தோழி ஆனந்தி ... அவளுடன் சேர்ந்து மற்றவர்களும் வெளியே எட்டிப்பார்த்தனர்.

தோழிகளின் கிண்டலை புரிந்துகொண்ட பூவிழி "இன்று மழை ஏதும் வராது , அதுக்கு நான் கேரன்டி" என சிரிக்காமல் கூறினாள் .

அவள் கூறியதை கேட்ட ஆனந்தி " இல்லையே இன்று கட்டாயம் மழை வரணுமே எனக்கூறியபடி மீண்டும் வெளியே எட்டிப்பார்த்தள்.

அவளுடைய தலையில் ஓங்கி குட்டு வைத்தாள் பூவிழி." ஆ,,,,,, " என தலையை பிடித்துகொண்டு பூவிழியை பார்த்து முறைத்தவளை பார்த்த மற்ற தோழிகள் சிரித்தனர். அவர்களை பார்த்த ஆனந்தியும் பூவிழியும் சிரிப்பில் இணைந்து கதைத்தும் சிரித்தும் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்தபடி இருந்தனர். அந்நேரம் அடுத்தபாடத்திற்கான ஆசிரியர் வர அனைவரும் அமைதியாகினர்.

வகுப்பறைக்குள் நுழைந்த ஆசிரியர் மாணவர்களை பார்த்து " வருடா வருடம் நம் காலேஜில் இருந்து ..சேவ் த சில்ட்ரன்... எனும் அமைப்புக்கு ஒரு குறிப்பிட்ட தொகை நிதி திரட்டி கொடுப்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும்.. அதனால் இன்று நீங்கள் எல்லோரும் சிறு சிறு குழுக்களாக பிரிந்து மணி கலெக்ட் பண்ணி நிர்வாகத்திடம் கொடுங்கள் " எனக்கூறி சென்று விட்டார்.

அவர் கூறியதை கேட்ட மாணவர்கள் அனைவரும் சல சலத்தபடி வகுப்பறையை விட்டு வெளியேறினர். பூவிழியும் அவளது தோழிள் மூவரும் காலேஜ் கண்டீனில் வந்து அமர்ந்தனர்.. எதோ யோசனையில் இருந்த பூவிழியை பார்த்த ஆனந்தி " ஏய் என்னடி ஆச்சு ஏன் ஒரு மாதிரி இருக்கே" என கேட்டாள். அவளை பார்த்த பூவிழி " நான் மணி கலக்ட் பண்ண வரலடி நீங்க மட்டும் போங்க" என கூறினாள். அவளின் பதிலை கேட்ட தோழிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

" ஏண்டி நானும் நீ காலேஜில் சேர்ந்ததில் இருந்து பார்த்து கொண்டிருக்கிறேன் எங்களுடன் நீ எங்கும் வருவதில்லை , அப்பிடி என்ன தாண்டி உன் பிரச்சனை" என கேட்ட தோழியிடம் மௌனம் சாதித்தாள் பூவிழி...

" அவள் தனியா காலேஜிற்கே வரமாட்டாள் இதில் எங்களுடன் வெளியே வந்திடாலும்....." என அலுத்து கொண்ட தோழியரை பார்த்து " சாரி டி நான் தனியா எங்கும் சென்றதில்லைடி அப்பிடி நான் எங்கும் சென்றேன் என்றால் சந்து கிட்ட நல்ல திட்டு வாங்க வேண்டியதுதான் " என கூறினாள்.

" யாரு சந்து ,,,, ஓ.... உன் கார்டியன் ராம்சுந்தரை சொல்கிறாயா? அவரை பார்த்தால் அப்பிடி ஒன்றும் திட்டுபவர் போல் தெரியவில்லையே....எவ்வளவு ஸ்வீட்டா பேசுவார் தெரியுமா.. அவரைப் போய் இப்பிடி கூறுகிறாயே இது அநியாயம் டி" எனக்கூறிய ஆனந்தி மற்ற இரு தோழிகளையும் பார்த்து கண்சிமிட்டி சிரித்தாள்.

அவள் கூறியதை கேட்ட பூவிழி ஆனந்தியை பார்த்து " ஏய் சந்து உங்கூட எப்படி பேசினான் " என ஆராய்ச்சி பார்வையுடன் கேட்டாள். அவளின் பார்வையை உணர்ந்து கொண்ட ஆனந்தி

" நீ எங்களோடு வெளியில் வருவதாக ப்ராமிஸ் பண்ணு நான் சொல்கிறேன்" என கூறினாள்.

தோழியின் தந்திரத்தை அறிந்து கொண்ட பூவிழி சிரித்தவாறே முடியாது எனும் விதமாக தலையை ஆட்டினாள்.. இவளின் மறுப்பை பார்த்த ஆனந்தி' இவளை இன்று எப்படியாவது வெளியில் அழைத்து செல்லவேண்டும் ' என மனதில் நினைத்தாள்.

திடீரென " ஆங்....ஐடியா.." என கத்திய தோழியை பார்த்த பூவிழி "ஏய் ஏண்டி இப்பிடி கத்துற" என சுற்றும் முற்றும் பார்த்தாள்.

"ஏய் நீ எங்களுடன் வெளியிடங்களுக்கு வந்தால் தானே உன் சந்து உன்னை திட்டுவார் .. நாம் ஏன் அவருடைய ஆபிசிற்கே போய் மணி கலக்ட் பண்ண கூடாது?" என கேட்டாள்.

" என்னது வெளியே சென்றாலே நான் காலி ... இதில் நீ வேற அவனுடைய ஆபீசிற்கே போவம் என்கிறாயே .. உனக்கு பைத்தியம் ஏதும் பிடிச்சிட்டா என்ன?" என கேட்டாள்..

பூவிழியை பார்த்த ஆனந்தி "ஏன் நான் கேட்பதில் என்ன தப்பு இன்று நாம் உன் கார்டியன் ஆபிஸ் போறம் ஒரு பிக் அமௌன்ட் கலெக்ட் பண்றோம்..காலேஜ் மனேஜ்மன்டிடம் நல்ல பேர் வாங்கிறோம்.." என கூறினாள்.

பூவிழி எவ்வளவு தான் எடுத்து கூறியும் அவளுடைய கூற்றை சட்டை செய்யாமல் அவளை வலுக்கட்டாயமாக தனது ஸ்கூட்டியில் ஏற்றி ராம் சுந்தரின்ஆபீஸ நோக்கி வண்டியை செலுத்தினாள் ஆனந்தி'தோழிகளின் கூற்றை ஒரு கட்டத்தில் தட்டமுடியாத பூவிழி விரல் நகங்களை கடித்து துப்பியவாறே வண்டியில் அமர்ந்திருந்தாள்.

*************************

ஆபிஸின் பார்க்கிங்குக்குள் வண்டியை விட்ட ஆனந்தியும் மற்ற தோழிகளும் பூவிழியை

இழுக்காத குறையாக உள்ளே அழைத்து சென்றனர்.

பூவிழியுடன் உள்ளே சென்ற மற்ற மூன்று தோழிகளும் "வாவ்....." என ஒரு சேர சத்தம் போட்டனர்.அவர்களை பார்த்த பூவிழி " ஏண்டி இப்பிடி வாயை பிளக்கிறீங்க" எனக்கேட்டாள்.

" ஏய் எவ்வளோ பெரிய ஆபீஸ் ....இங்கேயா உன் சந்து G.M ஆ இருக்கார்....சூப்பர் டி.... நான் காலேஜ் முடித்தவுடன் இங்கு தான் வேலைக்கு சேரப்போகிறேன் .. உன் சந்து கிட்ட ரெக்கமன்ட் பண்ணுடி ப்ளீஸ்...என கேட்ட ஆனந்தியை பார்த்த பூவிழி " முதல்ல நீ காலேஜை ஒழுங்கா முடி .. அதுக்கப்புறம் வேலை பார்ப்பதை பற்றி யோசிக்கலாம் " என சிடுசிடுத்தாள்.

அவளின் சிடுசிடுப்பை ஒரு தோள் குலுக்கலில் அலட்சியம் செய்து விட்டு ரிசப்சனை நோக்கி சென்ற ஆனந்தியை பார்த்து பல்லை கடித்தபடியே மற்ற இருவருடனும் சேர்ந்து அவளின் பின் சென்றாள் பூவிழி.

அவர்களை பார்த்த ரிசப்சனில் உள்ள பெண் "யார் நீங்க? உங்களுக்கு என்ன வேணும்?என கேட்டாள்? " நாங்க இந்த ஆபிசொட G.M சார மீட் பண்ணனும் எனக்கூறிய ஆனந்தியை பார்த்த ரிசப்சனிட்" இன்று சாருக்கு அப்பாய்மன்ட் எதுவும் இல்லையே" என கூறினாள்.

அவளின் கூற்றை கேட்ட ஆனந்தி "உங்க G.M சார் கிட்ட பூவிழி வந்திருக்கா எண்டு சொல்லுங்க அவரே எங்களை பார்க்க ஓடோடி வந்திடுவார்.."

என நாடக பாணியில் கூறினாள்.

அவள் கூறிய விதத்தை கேட்டு சிரித்த அந்த பெண் " சாரிங்க சார் இப்பொழுது ஆபிசில் இல்லையே , அவர் ஒரு கிளயண்ட மீட் பண்ண வெளியே போயிருக்கார் வர எப்பிடியும் சாயந்தரம் ஆயிரும் என கூறினாள்.

அதை கேட்ட பூவிழி மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள். ஆனால் தன் மகிழ்ச்சியை வெளியில் காட்டிக்கொள்laaது " இனி என்ன செய்வது இங்கு நின்றும் பிரயோசனமில்லை வாங்க நாம திரும்பி காலேஜுக்கே போவோம்" என கூறினாள். தோழிகள் மூவரும் அவளுடைய நடிப்பை கண்டு கொண்டு அவளை பார்த்து முறைத்தனர்.

இவர்களையே பார்த்துக்கொண்டு நின்ற ரிசப்சனிஸ்ட் "என்ன விடயமா G. M சார மீட் பண்ணனும்?" என வினவினாள். அவளிற்கு தாங்கள் வந்த காரணத்தை கூறிய தோழிகள் அப்பெண்ணின் யோசனை படிந்த முகத்தையே பார்த்து கொண்டிருந்தனர்.

திடீரென அப்பெண் மேசையில் உள்ள போனை எடுத்து நம்பர்களை அடித்தபடியே காதினுள் ரிசீவரை வைத்தாள்.மறுமுனை எடுக்கப்பட்டதும் " குட் ஆப்டர்னூன் சார் இங்கு காலேஜ் ஸ்டுடண்ட்ஸ் வந்திருக்காங்க.. எதோ .. பண்ட்.. கலக்ட் பண்ணனுமாம் , உங்க கேபினுக்கு அனுப்பி வைக்கவா?" என மிகவும் தாழ்மையாக கேட்டாள். அந்த பக்கம் கூறிய செய்தியை கேட்டு "ஒகே சார்" என கூறிய படி ரிசீவரை வைத்த அப்பெண் தன்னையே பார்த்து கொண்டிருந்தவர்களை நோக்கி " உங்க நல்ல நேரம் இப்ப M.D சார் பிரீயாத்தான் இருக்கார், யாரயாவது ரெண்டு பேர உள்ளே வர சொன்னார்

சீக்கிரம் போங்க எனக்கூறி தன் மேசை மேல் உள்ள பைலை புரட்ட தொட ங்கினாள்.

அவளிற்கு நன்றி கூறி திரும்பிய தோழிகள் பூவிழியை பார்த்தனர். அவளோ இவர்களை பார்க்காது எங்கோ வெறித்து பார்த்து கொண்டிருந்தாள். அவளை உலுக்கிய ஆனந்தி " பூவிழி, பூவிழி ஏண்டி பேயப்பார்த்த மாரி இப்பிடி நிக்கிறாய் ... சீக்கிரம் வா M.D சார பார்த்திட்டு வந்திடலாம்,"என கூறினாள்,

அவளை பார்த்த பூவிழி அவசரமாக " நான் வரவில்லை ...நான் இங்கேயே இருக்கன் நீ இவளை கூட்டிட்டு போ" என அருகில் நின்ற மற்ற தோழியை கை காட்டினாள். "புரியாம பேசாத பூவிழி நீ G.M க்கு வேண்டப்பட்டவள் என தெரிந்தால் எங்களுக்கு அதிகமாகவே பணம் கிடைக்க வாய்ப்பிருக்கு அதை கெடுக்காம வாயை மூடிக்கொண்டு பேசாமல் என்கூட வா" என கூறி அவளை இழுத்துச் சென்று M.D இன் அறைக்கதவை தட்டினாள்.

ஆனந்தியின் கையில் இருந்து தன்னுடைய கையை உருவிய படி" விடுடி ப்ளீஸ் விடுடி" என பூவிழி கெஞ்சி கொண்டிருக்கும் போதே " யெஸ் கமின்" எனும் குரல் கேட்டது. அக்குரலை கேட்டவுடனேயே ஏறக்குறைய பூவிழியை அந்த கேபினுக்குள் தள்ளியவாறே உள்ளே நுழைந்தாள் ஆனந்தி......... .

தொடரும்....

bottom of page