top of page

"காவலன் நானடி கண்ணம்மா 8

ஹாய் ...."காவலன் நானடி கண்ணம்மா" epi 08

epi 08......

......... கணணி திரையில் கண்களை பதித்தவாறே கேபினுக்குள் நுழைந்தவர்களை அமரும் படி கூறினான் பிரசாத். அவனின் முன்னாள் அமர்ந்த தோழிகளை நிமிர்ந்து பார்த்தவனின் விழிகளில் ஓர் இனம்புரியாத பார்வையை பார்த்த ஆனந்தி

"ஹலோ சார் .... ஐ ஆம் ஆனந்தி.... " என அவன் முன் தன் கையை நீட்டினாள்.

அவளின் கையை குலுக்கியபடியே அவள் அருகில் அமர்ந்திருந்த பூவிழியை பார்த்தான் பிரசாத். அவன் பார்வை தன் மேல் படிவது தெரிந்ததும் அவசரமாக அந்த ரூம் சுவரில் மாட்டப்பட்டிருந்த .....ராம் சீதாவின் ஓவியத்தின்

மீது பார்வையை பதித்தாள் பூவிழி...

பிரசாத் பூவிழியை பார்ப்பதை கண்ட ஆனந்தி தோழியின் காதருகில் குனிந்து " சாருக்கு ஹலோ சொல்லுடி" என முணுமுணுத்தாள். அவளை மனதுக்குள் திட்டியவாறே தன்னையே பார்த்துக்கொண்டிருந்த பிரசாத்தை நோக்கி

கையை நீட்டினாள் பூவிழி ...

தன் முன் நீட்டப்பட்டிருந்த வெண்டைப்பிஞ்சை போன்ற விரல்களை கொண்ட

அந்த கையுடன் தனது கையை கொடுத்தபடியே கேள்வியாக புருவம் உயர்த்தினான் பிரசாத்.

அவனுடைய பார்வையின் பொருள் புரிய " ஐ ஆம் பூவிழி" என தன்னை அறிமுகம் செய்து கொண்டாள்.....

அவளுடைய கண்களையே பார்த்து கொண்டிருந்தவனை ஏறெடுத்து பார்க்க தைரியம் இல்லாதவளாக குனிந்து கொண்டாள் பூவிழி.அவளையே பார்த்துக்கொண்டிருந்த பிரசாத்

" ம்ம் உங்களுக்கு நான் என்ன செய்யணும்?" என கேட்டான். அவனின் கேள்வியில் நிமிர்ந்த பூவிழி இன்னும் தன் கை அவன் கையிலேயே இருப்பதை உணர்ந்து அவசரமாக தனது கையை உருவ முற்பட்டாள்.... ஆனால்

அவன் விட்டால் தானே.....அவன் தான் அவளுடைய கையை இறுகப்பற்றியிருந்தானே.. இதை ஏற்கனவே அவள் எதிர்பார்த்தாளோ என்னவோ அருகில் உள்ள தோழியை நினைத்தபடியே சங்கடமான பார்வையுடன் அவனையும் பார்த்து ஆனந்தியையும் பார்த்தாள் . பார்த்தவள் அதிர்ந்தாள்.

எனெனில் அவளின் உயிர்த்தோழி இங்கு இருவர் இருப்பதையே மறந்தவளாய் பளிங்கு போல் காட்சியளித்த அந்த ரூமையே வாயை பிளந்தவாறு பார்த்துக்கொண்டிருந்தாள்.

பூவிழியின் பார்வையை புரிந்து கொண்டவனாய் அவளுடைய கையை விடுவித்தபடியே ""க்கும் "" என இருமினான்.அவனின் இருமலை கேட்டு ஏதோ கனவுலகத்தில் சஞ்சரித்துக்கொண்டிருந்த ஆனந்தி திடுக்கிட்டவளாய் அவனையும் பூவிழியையும் பார்த்தாள்.அவளையே பார்த்து முறைத்துகொண்டிருந்த தோழியை பார்த்து சிரித்து வைத்தவள் தாங்கள் வந்ததின் காரணத்தை பிரசாத்திடம் கூறினாள்..

"வெல்.... எந்த நம்பிக்கையில் இங்கு வந்தீங்க,,,?

ஒருவேளை நான் டொனேசன் தர முடியாது என்று சொன்னால் வேறு கம்பனிகளை ஏறி இறங்குவதாக உத்தேசமா?" என பூவிழியை கூர்மையாக பார்த்தபடி கடுமையான குரலில் வினவினான்.

அவனின் கேள்வியிலும் .குரலிலும் முழித்த ஆனந்தி " சார் நாங்க முதல்ல G.M சார தான் சந்திக்க வந்தோம் ...அவர் இங்கு இல்லாததால் தான் உங்களை டிஸ்டர்ப் செய்ய வேண்டியதாய் போய்ற்று என அவசரமாக கூறினாள்...

" நீங்க வந்ததை நான் டிஸ்டர்ப் என்று சொல்லவே இல்லையே ... அது சரி நீங்க G.M சாருக்கு வேண்ட பட்டவங்களா என்ன ?" என ஆனந்தியை பார்த்து கேட்டான்.

" ஐயோ .....சார் ...இவள் தான் உங்க G.M சாருக்கு மிகவும் வேண்டப்பட்டவள்.. அவர் இவளுடைய கார்டியன் ..... இவள் வெளி இடங்களுக்கு எங்களுடன் வரமாட்டாள் ..அதனால் தான் கட்டாயப்படுத்தி இங்கு அழைத்து வந்தோம்..." என கூறினாள்.

அவளின் கூற்றை கேட்ட பிரசாத் பூவிழியை பார்த்தபடியே தனது செக் புக்கை எடுத்து சைன் பண்ணி ஆனந்தியிடம் நீட்டினான். ஆச்சரியத்துடனே அதனை வாங்கி பார்த்த ஆனந்தி அந்நாளில் மூன்றாவது முறையாக வாய் பிளந்தாள்.. ஏனென்றால் பத்து இலட்ச ரூபாய்க்கு செக் எழுதியிருந்தான் பிரசாத்.

" ஓ மை காட் டென் லாக்ஸ்..... தேங்க்யு சார்... தேங்க்யு ஸோ மச்... என துள்ளிக்குதிக்காத குறையாக பூவிழியை கட்டிக்கொண்டு தனது சந்தோசத்தைவெளிப்படுத்தினாள். உதவிசெய்யும் அவளின் மனது புரிந்த பூவிழியும் அவளை அன்புடன் அணைத்து கொண்டாள்.

பின் பிரசாத்தை பார்த்த ஆனந்தி "சச் எ பிக் அமௌன்ட் சார்..... இதன் மூலம் எத்தனையோ பிள்ளைகள் மூன்று வேளை சாப்பாட்டை நிம்மதியாக சாப்பிடுவார்கள் என கூறி உணர்ச்சி வசப்பட்டாள்..

அவளை பார்த்து சிரித்த பிரசாத் "உங்களுக்கு நான் தான் தேங்க்ஸ் சொல்லணும்... இப்பிடியொரு நல்ல காரியத்தை நான் செய்வதற்கு நீங்க தான் காரணம்.. என கூறினான்..

அவன் கூறியதை கேட்டு சிரித்தபடியே அப்போ நாங்கள் கிளம்புறம் சார் என கூறி எழுந்தாள். அவளுடைய கூற்றை ஆமோதிப்பது போல் பூவிழியும் பார்வையாலேயே அவனுக்கு நன்றி கூறினாள்..அவளின் பார்வையை உணர்ந்து கொண்டதன் அடையாளமாக அவனும் தனது இமைகளை மூடித்திறந்தான்.

இவர்களின் பார்வை பரிமாற்றத்தை பார்த்து கொண்டிருந்த ஆனந்தி '..... என்ன தான் நடக்குது இங்க....'என மனதுக்குள் நினைத்தபடியே

பூவிழியை தட்டி கிளம்புவோம் என சைகை செய்தாள்...

தோழியின் சைகையை புரிந்து விடைபெறும் நோக்குடன் கதிரையில் இருந்து எழுந்த பூவிழி பிரசாத்தை பார்த்த பார்வையில்

என்ன இருந்தது என ஆனந்தியால் கண்டுபிடிக்க முடியவில்லை.. ஆனால் ஏதோ இருக்கு என்று மட்டும் அவளின் உள்மனம் கூறியது..

தொடரும்........

bottom of page